Showing posts with label Mahabharatham Story in Tamil. Show all posts
Showing posts with label Mahabharatham Story in Tamil. Show all posts

Thursday, 14 May 2020

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-24

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-24
துருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த துரோணனைக் கொன்றே தீர வேண்டும். அவன் உயிர்போகும் நாள் தான் எனக்கு இனிய நாள். ஐயோ! கடவுளே! என் வாழுநாளுக்குள் அது நிறைவேறாவிட்டால், என் வம்சாவழியினராவது அவனைக் கொல்ல வேண்டும். ஆனால், எனக்கு பிள்ளை வரம் இதுவரை இல்லையே. என்ன செய்வேன்? என புலம்பினான்.
அத்துடன் அர்ஜூனனின் வில்லாற்றல் பற்றிய நினைவும் எழுந்தது. மிகச்சிறந்த அந்த இளைஞன் என்னை கலக்கி எடுத்து விட்டானே! வீரர்கள் போற்றுதற்குரியவர்கள். இப்படிப்பட்ட வீரன் எனக்கு மருமகனாக இருந்தால், எப்படியிருக்கும்? ஆனால், எனக்கு பெண் குழந்தையும் இல்லையே! இப்படி பல சிந்தனைகளுடன் நடந்தவனின் கால்கள் திசைமாறின.


Read More @ https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/mahabharatham/mahabharatham-episode-24-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-24

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-25

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-25
தந்தையே! நீங்கள் சிரிப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல இப்போது இல்லை. அவனது தம்பிமார்கள் அகங்காரம் பிடித்து அலைகின்றனர். அவர்களால் எனக்கு இப்போது அரசாங்கத்தில் செல்வாக்கு இல்லை. பெருமை மிகவும் குறைந்து விட்டது. எனவே, இந்த ராஜ்யத்திற்கு என்னை யுவராஜா ஆக்குவதே முறையானது, என்றான் துரியோதனன். துரியோதனன் தன் நிலையை தானே குறைத்து சொன்னது திருதராஷ்டிரனுக்கு அவமானமாக இருந்தது. தம்பி புத்திரர்கள் பெருமையில் மேலோங்கி இருப்பதை தானே ஒப்புக்கொண்ட தன் மகனைப் பற்றி அவன் வருத்தப்பட்டான்.


Read More @ https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/mahabharatham/mahabharatham-episode-25-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-25/